தமிழ்நாடு தஞ்சாவூரில் அமையப் பெற்றுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
உலகத் தமிழர் பேரமைப்பினால் சுமார் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில், இறுதிப்போரின் காட்சிகள் கற்சிலைகளாக வடிவமைக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
பழ நெடுமாறன் அவர்கள் சசிகலாவிற்கு முள்ளிவாய்க்கால் இறுதிப் போர் அவலம் மற்றும் தமிழர் நிலை குறித்து சசிகலாவிற்கு விளக்கங்களைக் கொடுத்திருந்தார்.