தலிபான்களின் பூரண கட்டுப்பாட்டில் ஆப்கானிஸ்தான்

ஏற்க்குறைய இருபது வருடங்களின் பின்னர் இஸ்லாமிய போராட்டக் குழுவான தலிபான்களின் முழுக் கட்டுப்பாட்டில் ஆப்கானிஸ்தான் நாடு வீழ்ந்துள்ளது.

அண்மையில் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க இராணுவம் முற்றாக வெளியேறிய பின்னர், தலிபான்கள் மெதுவாக ஆப்கானிஸ்தானை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் தொடங்கினர். எவ்வித எதிர்ப்புமில்லாமல் தலிபான்கள் முன்னேறி இறுதியாக தலைநகரான காபூலை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் காணி உபகிஸ்தான் நாட்டிற்கு தப்பி ஓடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றபோதும் உறுதிப்படுத்தப்படவில்லை.

அமெரிக்கப் படையினர் தமது தூதரக அதிகாரிகள், போரில் உதவி புரிந்தோர் என பலரையும் விமானம் மூலம் வெளியேற்றியுள்ளனர்.

மேற்க்குலக நாடுகள் ஒன்றினைந்து செயற்பட்டு, ஆப்கானிஸ்தானில் சமாதானத்தை நிலை நிறுத்த வேண்டுமென இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்ஸன் வேண்டுகோள் விடுத்துள்ளதுள்ளார்.

Latest articles

Similar articles