கொழும்பிலுள்ள பிரதமரின் இல்லம் அருகே மாணவர்கள் ஆர்ப்பாட்டம் 📹

பிரதமர் மகிந்த ராஜபக்சவின் கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள இல்லம் அருகே பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது. இதனால் சற்று பதற்றமான சூழ்நிலை தோன்றியுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்களினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில், பல நூற்றுக் கணக்கான இளைஞர், யுவதிகள் ஈடுபட்டுள்ளனர். கொட்டும் மழையிலும் அரசிற்கு எதிராக கோசங்கள் எழுப்பியபடி ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டுள்ளனர்.

மகிந்தவின் இல்லத்தைச் சுற்றி பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், கலகம் அடக்கும் காவல்துறையினரும் அழைக்கப்பட்டுள்ளனர்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles