பதவிக்காலம் முடியும்வரை நானே பிரதமர் – மகிந்த ராஜபக்ச

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அரசியலிலும் சில பல சலசலப்புகள் நாளாந்தம் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. அதன் ஒரு வடிவம்தான் ‘தேசிய அரசாங்கம்‘ எனும் சலசலப்பு.

மகிந்த ராஜபக்ச ஓய்வு பெறப்போவதாகவும், ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்து, தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்க திரை மறைவில் வேலைத்திட்டம் ஒன்று இடம்பெறுவதாகவும் ஊடகங்களில், சமூக வலைத்தளங்களில் பரவலாக செய்திகள் உலாவியது.

இதெற்கெல்லாம் முடிவு கட்டும் விதமாக பிரதமர் மகிந்த ராஜபக்ச, தனது பதவிக்காலம் முடியும்வரை நானே பிரதமர் எனத் தெரிவித்துள்ளார். மேலும், ஐக்கிய தேசியக் கட்சியுடனோ அல்லது சஜித் அணியினருடனோ எவ்வித தொடர்புகளும் கிடையாது என பிரதமர் தெரிவித்துள்ளார். எல்லாமே பொய்யான தகவல்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எது எவ்வாறாயினும், ‘நெருப்பில்லாமல் புகையாது’ எனும் பழமொழியையும் நாம் இந்நேரத்தில் ஞாபகப்படுத்திக் கொள்ளவேண்டும். தமிழ்-சிங்களப் புத்தாண்டு முடிவடைந்து, பாராளுமன்றம் கூடும்வரை நாம் பொறுத்திருக்கவேண்டும்.

Latest articles

Similar articles