பெரும்பான்மையை நிரூபிக்க ஜனாதிபதி வேண்டுகோள்

மீண்டும் நம்பிக்கையில்லாப் பிரேரணையை பாராளுமன்றில் சமர்ப்பித்து, ஒழுங்கான முறையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கட்சித் தலைவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எனவே இன்று (16/11) பாராளுமன்றம் கூடும்போது, வாக்கெடுப்பு நடக்கும் சாத்தியமுள்ளது.

இரண்டு மணித்தியாலங்களுக்குமேல் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், தான் இனி பாராளுமன்றத்தை ஒத்தி வைக்க மாட்டேன் எனவும், பெரும்பான்மையை நிரூபிக்கும் கூட்டணிக்கு தான் ஆதரவு தருவதாகவும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

மகிந்த அணி இன்றும் பாராளுமன்ற செயற்பாட்டைக் குழப்புவார்கள் என்ற நம்பிக்கையில் ஜனாதிபதி வாக்குறுதி அளித்தாரா இல்லையா என்று பாராளுமன்றம் கூடிய பின்னர் தெரியவரும்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles