மஹிந்தவிற்கு எதிராக 122 பாராளுமன்ற உறுப்பினர்கள்

மேல் நீதிமன்ற உத்தரவின் பின்னர், இன்று (14/11) பாராளுமன்றம் 10 மணிக்கு கூடியது.

ஆரம்பம் முதல் மஹிந்த அணியினர் பெரும் கூச்சல் எழுப்பி, சபை நடவடிக்கைகளை குழப்பியபடி இருந்தனர்.

இத்தருணத்தில் மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டது. பாராளுமன்ற சட்ட திட்டங்களுக்கு அமைவாக வாய் மூலமான வாக்கெடுப்பு நடைபெற்றது.

இதன்போது மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிராக 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்தனர். இதனை ரணில் விக்ரமசிங்கவும், இரா.சம்பந்தனும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மஹிந்த அணியினரின் பெரும் இடையூறுகள் காரணமாக, சபாநாயகர் பாராளுமன்றத்தை நாளை (15/11) காலை 10 மணிவரை ஒத்திவைத்துள்ளார்.

இன்றைய அமர்வுகளின் பின்னர் மஹிந்த அணியிலிருந்து வடிவேல் சுரேஷ், பௌஸி, பியசேன கமகே, மனுஷ நாணயக்கார மற்றும் வசந்த சேனநாயக்க ஆகியோர் ரணிலின் பக்கம் தாவியுள்ளனர். இவர்கள் தாம் மஹிந்த அணியிடம் பெற்றிருந்த அமைச்சுப் பொறுப்புகளில் இருந்து இராஜினாமா செய்யவுள்ளனர்.

மேலும் சில மஹிந்த அணி உறுப்பினர்கள் ரணிலின் பக்கம் சேர வாய்ப்பிருப்பதாக அறியமுடிகிறது.

Latest articles

Similar articles