இலங்கை முழுவதும் இன்று(06/05) ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது. பல தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புகள் என்பன ஒன்றினைந்து இந்த ஹர்த்தாலை ஒழுங்கு செய்துள்ளன.
மேற்படி அமைப்புகள் மக்களிடம் விடுத்த வேண்டுகோள்களாவன,
🌑 வீடுகளில், அலுவலகங்களில், தொழிற்சாலைகளில் கறுப்புக் கொடியை பறக்க விடுதல்
🌑 கடைகளை மூடி ஆர்ப்பாட்டத்தில் பங்குபெறல்
🌑 கறுப்பு உடையணிந்து, கறுப்புக் கொடி பிடித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடல்
🌑 ஊழல் அரசாங்கத்திற்கெதிராக இயன்றளவு பதாதைகள், வாசகங்களை வெளிப்படுத்தல்
🌑 வன்முறைகளற்ற விதத்தில் ஊர்வலங்கள், கலாச்சார நிகழ்வுகள் மற்றும் வீதிச் சித்திரங்கள் வரைதல் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்ளல்
மக்களின் வேண்டுகோளை ஏற்று ஜனாதிபதியும், பிரதமரும் பதவி விலக வேண்டுமென நாடு முழுவதும் பல போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. எனினும் ஜனாதிபதியும், பிரதமரும் தாம் பதவி விலகப் போவதில்லை என்று பிடிவாதமாக உள்ளார்கள்.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட அரசாங்கம் பதவி விலகாவிடின், வரும் 11ம் திகதியிலிருந்து தொடர் ஹர்த்தால் போராட்டங்கள் இடம்பெறுமெனவும் தொழிற்சங்கள் அறிவித்துள்ளன.
