தேர்தலை விரும்பும் மகிந்த ராஜபக்ச

மகிந்த ராஜபக்ச பொதுத்தேர்தலை நடத்தும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாராளுமன்றம் கூடும்போது தன்னால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியுமென தெனாவெட்டாக தெரிவித்துவந்த மகிந்த ராஜபக்ச, நேற்று (14/11 ) ரணில் விக்ரமசிங்கவிற்கு பெரும்பாண்மை இருப்பதை உணர்ந்து, இப்போது பொதுத்தேர்தலை நடத்தும்படி வேண்டுகோள் விடுக்கிறார்.

இக்காலகட்டத்தில் தேர்தல் நடந்தால், இயன்றளவு அரச அதிகாரங்களைப் பயன்படுத்தி தேர்தலில் வெற்றியீட்ட முடியுமென கணக்கு போட்டுள்ள மகிந்த, கடும்போக்குடைய பொதுஜன பெரமுன என்ற கட்சியை இலங்கையின் இரண்டாவது பெரிய கட்சியாக உருவாக்க முயன்று வருகிறார்.


Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles