இலங்கையில் கொரோனாவால் 82பேர் உயிரிழப்பு

இலங்கையில் 82பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர் என சுகாதார சேவைகள் தலமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

முப்பது தொடக்கம் அறுபது வயதிற்கிடைப்பட்ட பதினான்கு ஆண்களும், எட்டுப் பெண்களும், அறுபது வயதிற்கு மேற்பட்ட 27 ஆண்களும், 33 பெண்களும் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று ஏற்பட்டு இதுவரையில் இலங்கையில் 4,727 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வேகமாகப் பரவிவரும் டெல்டா வகை கொரோனாவினால் தலைநகர் கொழும்பிலுள்ள வைத்தியசாலைகள் தொற்றாளர்களால் நிரம்பியுள்ளது. போதிய கட்டில் மற்றும் ஒக்சிஜன் வசதிகள் இல்லாமையினால் நோயாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை யாழ் வைத்தியசாலையிலும் ஒக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

சக்தி வாய்ந்த டெல்டா வகை கொரோனாவின் பரவல் குறையாதபோதும், மக்களின் நடமாட்டங்கள் நாடளாவியரீதியில் அதிகரித்துள்ளதால், வரும் நாட்களில் இலங்கை மீண்டும் முடக்க நிலைக்கு செல்ல வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன!!

Latest articles

Similar articles