கடந்த ஏழு நாட்களில் 1,452பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு

இலங்கையில் கடந்த ஏழு நாட்களில் 1,452பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். சராசரியாக நாளொன்றிற்கு 207பேர் வீதம் இறந்துள்ளார்கள். அதாவது ஒரு மணி நேரத்தில் எட்டுப் பேர் உயிரிழக்கிறார்கள். இது மிகவும் அபாயகரமான இறப்பு வீதமாகும்.

முழுவீச்சில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றபோதும், இறப்பு வீதத்தில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை. ஐம்பது வயதிற்குட்பட்ட பலர் இறக்கிறார்கள். நவீன மயப்படுத்தப்படாத, முற்றிலும் அரசியல் மயப்படுத்தப்பட்ட இலங்கை சுகாதாரத் துறையினரால் இறப்பவர்கள் தொடர்பான உண்மையான மருத்துவ அறிக்கைகளோ, தரவுகளோ எதுவும் இல்லை.

வைத்தியர்களும், தாதியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் தம் உயிரைப் பணயம் வைத்து சேவையாற்றி வருகின்றபோதும், அரசியல் தலையீட்டினால் இலங்கையின் கொரோனா பரவல் மற்றும் இறப்புகள் தொடர்பான உண்மையான நிலை மர்மமாகவே உள்ளது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles