இலங்கையில் கொரோனா தொற்றினால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்ந்தும் அதிகரித்த வண்ணமே உள்ளது.
23ம் திகதி மாலை 8:30 மணி வரையிலான அரச தரவுகளின்படி 4,355 புதிய தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். கொரோனா தொடங்கிய நாளிலிருந்து இதுவரை தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 394,355 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. பிரதம சுகாதார சேவைகள் அதிகாரியின் உத்தியோகபூர்வ தகவல்களின்படி, கடந்த 22ம் திகதி 194பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இதில் முப்பது வயதிற்கும், அறுபது வயதிற்கும் இடைப்பட்ட 49 பேரும் உள்ளடங்குவர்.

இலங்கையின் சனத்தொகையையுடன் ஒப்பிடும்போது, தற்போது ஏற்பட்டுக்கொண்டிருக்கும் பாதிப்புக்களின் விகிதம் அதிகமாகும். தொடர்ந்தும் இதேமாதிரி நிலமை செல்லுமாயின் சனத்தொகையில் பாரிய மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. இருப்பினும், தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் முழுவீச்சில் தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது. நாடு தழுவியரீதியில் பொது முடக்கம் நடைமுறையிலுள்ளது. எனவே வரும் வாரங்களிலிருந்து கொரோனாவின் பாதிப்பு பெருமளவில் குறைய வாய்ப்புள்ளது !!