இலங்கையில் கொரோனாவின் பரவல் காரணமாக நாளாந்தம் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் தொடர்ந்த வண்ணமே உள்ளது.
இலங்கையின் சுகாதார சேவைகள் பிரதான அதிகாரியினால் நேற்று (24/08) வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ தரவுகளின்படி, 190 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இதில் முப்பது வயதிற்குட்பட்ட இருவரும் உள்ளடங்குகின்றனர். முப்பதிற்கும், அறுபது வயதிற்கும் இடைப்பட்ட 38 பேரும், அறுபது வயதிற்கு மேற்பட்ட 150 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை மேலும் 4,446பேர் புதிதாக தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இதில் வெளிநாட்டில் இருந்து திரும்பிய 19 பேரும் உள்ளடங்குகின்றனர்.
