ஒரே நாளில் 4,304 தொற்றாளர்கள், 183 மரணங்கள்

இலங்கையில் ஒரே நாளில் 4,304 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். வேகமாகப் பரவி வரும் டெல்டா வகை கொரோனாவால், தொற்றாளர்களின் எண்ணிக்கையும், மரணிப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன.

21ம் திகதிக்கான தரவுகளின்படி, இலங்கையில் மொத்தமாக 183 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி இலங்கையில் இதுவரையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7,366 ஆக உயர்ந்துள்ளது.

முப்பது வயதிற்குட்பட்ட இரு பெண்களும், முப்பதிற்கும் அறுபது வயதிற்க்கும் இடைப்பட்ட 45 பேர் உட்பட, மொத்தமாக 76 பெண்களும், 107 ஆண்களும் மரணித்துள்ளனர்.

இதேவேளை 18 வயதிற்கும், 30 வயதிற்கும் இடைப்பட்டவர்களுக்கு வரும் செப்டெம்பர் மாதம் இரண்டாம் கிழமையிலிருந்து தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளதாக நோய்த்தடுப்பு மையத்தின் தலமை அதிகாரி வைத்தியர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles