இலங்கை பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக ஏழு பேர் கைது

இலங்கையில் இன்று (21/04) கொழும்பு, மட்டக்களப்பு, நீர்கொழும்பு பிரதேசங்களில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களில் இதுவரை (இலங்கை நேரப்படி மாலை 5:30வரை) 215பேர் உயிரிழந்துள்ளதுடன், 450பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.

இதில் மூன்று இலங்கை காவல்துறை உத்தியோகத்தர்களும், 27 வெளிநாட்டு பிரஜைகளும் அடங்குவர்.

இந்த திட்டமிடப்பட்ட கொடூர தாக்குதல்கள் தொடர்பாக ஏழுபேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தனா தெரிவித்துள்ளார்.
இருப்பினும் அவர் தெளிவான, மேலதிக தகவல்கள் எதனையும் வழங்கவில்லை.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான தகவல்கள் ஏற்கனவே பாதுகாப்புத்தரப்பினருக்குத் தெரிந்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றபோதும், எவ்வாறு இந்த தாக்குதல் இடம்பெற்றது என்பது பெரும் மர்மமாகவே உள்ளது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles