கொழும்பு, மட்டக்களப்பு, நீர்கொழும்பு தேவாலயங்களில் பல குண்டு வெ​டிப்புகள், 215ற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

​இன்று (21/04/19) காலை இலங்கையின் கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு தேவாலயங்களில் இடம்பெற்ற குண்டு வெ​டிப்பு சம்பவங்களில் இதுவரை 215ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், 450 பேர் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை கொழும்பிலுள்ள மூன்று ஐந்து-நட்சத்திர விடுதிகளிலும் குண்டுகள் வெடித்துள்ளன.

உயிரிழந்தவர்களில் 27 பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என தெரியவருகிறது.

இந்த நாசகார செயல் தொடர்பாக இலங்கை இராணுவம் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.

கொழும்பு

கொழும்பின் பிரசித்திபெற்ற கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் பாரிய குண்டு ஓன்று வெடித்ததில் பலர் உயிரிழந்துள்ளதுடன் 189 பேர் காயமடைந்துள்ளனர்.

மேலும் கொழும்பிள்ள பிரபல ஐந்து-நட்சத்திர விடுதிகளான சினமன் கிராண்ட், கிங்ஸ்பெரி மற்றும் ஷங்கரி-லா விடுதிகளிலும் குண்டுகள் வெடித்துள்ளன.

கொழும்பு வைத்தியசாலை தகவல்களின்படி, கொழும்பில் இதுவரை 73 பேர் உயிரிழந்துள்ளதுடன், 260பேர் வரையில் காயமடைந்துள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு

நீர்கொழும்பின் புனித செபஸ்தியான் தேவாலயத்திழும் பாரிய குண்டு வெடித்ததில் 111 பேர் வரையில் உயிரிழந்துள்ளதுடன் 100பேர் வரையில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதித்திக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு

மட்டக்களப்பிலுள்ள சேயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற பாரிய குண்டு வெடிப்பு சம்பவத்தில் 28 பேர் வரையில் உயிரிழந்துள்ளதுடன், 51 பேர் வரையில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதித்திக்கப்பட்டுள்ளனர்.

Latest articles

Similar articles