பயங்கரவாதச் செயல் தொடர்பாக பலர் கைது, இன்டர்போல் களத்தில்

இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தின்பேரில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு, வத்தளை, மாதம்பை, தம்புள்ளை, வெல்லம்பிட்டி, மன்னார், கந்தானை, கட்டுகஸ்தோட்டை, கம்பளை போன்ற பகுதிகளிலிருந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள் என அறிய முடிகிறது.

மேலும் இந்த தொடர் குண்டுத் தாக்குதல்களின் பின்னணியில் பிறநாட்டு சக்திகளுக்கும் தொடர்பிருக்கலாம் என்ற ஐயத்தில், இன்டர்போல் அதிகாரிகள் இலங்கை வந்து விசாரணையை முன்னெடுக்கவுள்ளனர்.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் காத்தன்குடியைச் சேர்ந்தமுஸ்லிம் நபர் ஒருவரை விசேட அதிரடிப்படையினரும், காவல்துறையினரும் தேடி வருகின்றனர்.
கடந்த இரு மாதங்களாக வாடகை வீடு ஒன்றில் தங்கி இருந்த அந்த நபரை, ஆடம்பர வாகனங்களில் சந்தேகத்திற்கிடமான சிலர் வந்து சந்தித்துச் சென்றுள்ளனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் அந்த நபர் தொடர்பான எந்த தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles