மஸ்கெலியா பள்ளிவாசலில் 47 கத்திகள் மீட்பு. வைத்தது யார் ???

நுவரெலியா மாவட்டம் மஸ்கெலியா பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் 47 கத்திகள் மற்றும் கோடரிகள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனுடன் தொடர்புபட்டதாக ஒருவரை கைது செய்துள்ளதாகவும், அவரை நாளை (28/04) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில், நாடாளாவியரீதியில் இடம்பெற்றுவரும் தேடுதல் நடவடிக்கைகளின் போது, வெடி பொருட்கள், கத்திகள், வாள்கள், கோடரிகள் என்பன மீட்கப்படுகின்றன.

அத்துடன் முஸ்லிம் இளைஞர்களை கைது செய்யும் நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றன.

கைதுகள் தொடர்பாக காவல்துறை அறிவிக்கின்றது, ஊடகங்களும் அப்படியே பிரசுரிக்கின்றன. வெள்ளைவான் பயமில்லாதபோதும், ஊடகங்கள் எதுவும் எதிர்க்கேள்விகள் கேட்கின்றமாதிரி தெரியவில்லை.

கொழும்பு கொம்பனித் தெருவிலுள்ள பள்ளிவாசல் ஒன்றிலிருந்து 46 வாள்களும், 15 கத்திகளும் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் அறிவித்து 24 மணி நேரத்தினுள் மஸ்கெலியாவிலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் 47 கத்திகள் மற்றும் கோடரிகளை மீட்டுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

நடக்கும் நிகழ்வுகள் யாவும் உண்மையானவையா என்பதில் பல சந்தேகங்கள் உள்ளன.

கொழும்பிலும், மஸ்கெலியாவிலும் அண்ணளவாக ஒரே எண்ணிக்கையிலான (முறையே 47, 46) கத்திகள், வாள்கள் மீட்கப்பட்டுள்ளன. காவல்துறையினரும் சொல்லிவைத்ததுபோல் பள்ளிவாசலுக்குச் சென்று வாள், கத்திகளை மீட்கின்றனர்.

கத்திகள், வாள்கள் சகிதம் வன்முறை செய்யவேண்டுமெனில் மனிதவலு அதிகம் தேவை. அப்படியாயின் இலங்கையில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட நூற்றுக்கணக்கில் முஸ்லிம் இளைஞர்கள் தயாராக இருக்கிறார்களா? அதுவும் ஒரு பள்ளிவாசலில் இருந்து 40 – 50 பேர் வாள், கத்திகளுடன் வந்து வன்முறையில் ஈடுபடுவார்களா?

அல்லது முஸ்லிம்கள் வன்முறைக்கு தயாராக இருக்கிறார்கள் என இலங்கை அரசு காட்ட முற்படுகிறதா????

முப்பது வருட போராட்டத்த்தில் தமிழர்களை நசுக்க என்னென்ன சூழ்ச்சிகள் இடம்பெற்றன என உலகமறியும். இப்போ முஸ்லிம்களா ????

Latest articles

Similar articles