60 அமெரிக்க ராஜாங்க அதிகாரிகளை வெளியேற்றும் ரஷ்யா

அண்மையில் பிரிட்டனில் இடம்பெற்ற முன்னாள் ரஷ்ய உளவாளி மற்றும் அவரது மகள் மீதான கொலை முயற்சி தொடர்பாக உரிய விளக்கம் அளிக்காததால், பிரிட்டனிலுள்ள 23 ரஷ்ய அதிகாரிகளை பிரிட்டன் வெளியேற்றி இருந்தது. இதனைத் தொடர்ந்து அமெரிக்கா உட்பட ஏனைய சில மேற்கத்தைய நாடுகளும் ரஷ்ய அதிகாரிகளை வெளியேற்றி இருந்தன.

இதற்கு பதிலடியாக ரஷ்யா, தனது நாட்டிலுள்ள அமெரிக்க தூதரகத்தை மூட உத்தரவிட்டுள்ளதுடன், 60 அமெரிக்க ராஜாங்க அதிகாரிகளையும் வெளியேறுமாறு பணித்துள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த வெள்ளை மாளிகை அதிகாரிகள், “இந்த நடவடிக்கை எதிர்பார்த்த ஒன்றுதான், இது அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கு இடையேயான உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது” என தெரிவித்துள்ளனர்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles