இலங்கை ஜனாதிபதியைக் கொல்ல இந்திய உளவு நிறுவனம் சதி !!

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவைக் கொலை செய்ய இந்திய உளவு நிறுவனமான ‘றோ’ சதித்திட்டம் தீட்டியதாக, அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவித்திருந்தார் என ‘இந்து’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த சதித்திட்டம் தொடர்பாக இந்திய பிரதமர் மோடி எதனையும் அறிந்திருக்க வாய்ப்பில்லை என மைத்திரிபால சிறிசேனா தெரிவித்திருந்தார் என இந்து பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது.

மேற்குறித்த செய்தி தொடர்பாக ஜனாதிபதியின் ஆலோசகரும், ஒருங்கிணைப்புச் செயலாளருமான ஸ்ரீலால் கருத்து தெரிவிக்கையில், சில இரகசிய அமைப்புக்கள் தலைவர்களைக் கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டதாகவும், இருப்பினும் ஜனாதிபதி ‘றோ’ என்ற வசனத்தை எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

'நெருப்பில்லாமல் புகையாது'
Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles