இந்தியாவிலிருந்து 100 தொன் ஒக்சிஜன்

இந்திய கடற்படையின் சக்தி கப்பல் மூலம் 100 மெற்றிக்தொன் ஒக்சிஜன் இலங்கை கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் ஒரு தொகுதி ஒக்சிஜன் விரைவில் இலங்கை கொண்டுவரப்படுமென கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இதேவேளை நாளை இலங்கை கடற்படையின் கப்பல் ஒன்று சென்னையிலிருந்து 40 மெற்றிக்தொன் ஒக்சிஜனை கொண்டுவரவுள்ளது.

இலங்கையில் வேகமாகப் பரவிவரும் டெல்டா வகை கொரோனாவால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் தொற்றாளர்களுக்கு வழங்கப்படும் ஒக்சிஜனுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles