ஓமானில் இலங்கைப் பெண்கள் பாலியல் ஏலத்தில் விற்பனை

இலங்கையைச் சேர்ந்த 12 பெண்கள் ஓமானில் பாலியல் தொழிலிற்காக பகிரங்கமாக ஏலத்தில் விடப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமொன்று டுபாய் அபுதாபியில் வீட்டுப் பணிப்பெண் வேலைக்கு அமர்த்துவதாகத் தெரிவித்து, இரகசியமாக 12 பெண்களை ஓமானுக்கு அனுப்பி வைத்துள்ளது. ஓமானில் இடம்பெற்ற ஓமானியரின் கேளிக்கை விருந்தில் (party), அந்த 12 பெண்களும் பகிரங்கமாக ஏலத்தில் பாலியல் தொழிலுக்காக விற்பனை செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி சம்பவம் தொடர்பாக பாராளுமன்றில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜெயவர்த்தன கேள்வி எழுப்பியிருந்தார். இது தொடர்பாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச பதிலளிக்கையில், குறித்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளதுடன், சில வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் விதிமுறைகளையும், நிதிகளையும் மீறி செயற்படுகின்றார்கள் எனவும் குற்றம் சாட்டினார்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles