ஓமான் பணிப்பெண்கள் விவகாரம், ஒருவர் கைது

டுபாயில் வேலை எனக் கூறி ஓமானுக்கு சட்டவிரோதமாக பெண்களை அழைத்துச் சென்றவரை இலங்கை காவல்துறையினர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

இன்று(19/11) இலங்கை திரும்பிய 44 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பல வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களின் உரிமையாளர் எனத் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட நபர் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்கா காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரா, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் அவர்களுக்கு விடுத்த வேண்டுகோளையடுத்து, வெளிநாட்டிற்கு ஆட்களைக் கடத்தல் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக சட்டவிரோதமாக ஆட்களை அனுப்புவோரின் நடவடிக்கைகளை முறியடிக்க மிகக் கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம் நாடு தழுவியரீதியில் தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிரபலமானவை