கடந்த காலங்களில் சுய அரசியல் இலாபங்களிற்காக இனவாத முரண்பாடுகளை தோற்றுவித்த உதய கம்மன்பிலவின் கடந்த கால செயற்பாடுகள் பற்றி மக்கள் ஆராய வேண்டும் என ரஞ்சன் ராமநாயக்கா தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை முன்னிலைப்படுத்தி, முஸ்லிம் தமிழ் மக்களிடையே இனவாத முரண்பாடுகளை தோற்றுவித்து, 2019 இல் ஆட்சி மாற்றம் ஏற்பட மிக முன்னிற்று செயற்பட்டவர் உதய கம்மன்பில.
தற்போது ரவி செனவிரத்ன மற்றும் ஷாணி அபயசேகரா ஆகியோர் மீது தனது தனிப்பட்ட பகையை தீர்த்துக் கொள்ளவே உதய கம்மன்பில புதிய நாடகத்தை அரங்கேற்றியுள்ளார் எனவும் ரஞ்சன் ராமநாயக்கா தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுக்க தவறியமைக்கு ரவி செனவிரத்னதான் காரணம் என உதய கம்மன்பில அண்மையில் தெரிவித்திருந்தார். இவரின் இந்த நாடகத்தின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை அநுர அரசாங்கம் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.