ஏவுகணை சோதனைகள் யாவும் நிறுத்தம் – வடகொரியா

அனைத்து ஏவுகணை சோதனைகளையும் நிறுத்துவதாகவும், மற்றும் அணு ஆயுத தளங்களை உடனடியாக மூடுவதாகவும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.

கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்டவும் மற்றும் பொருளாதார வளர்ச்சியை இலக்காகவும் கொண்டு இந்த முடிவை வடகொரிய அதிபர் எடுத்துள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் அறிவித்துள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பாக கருதப்படும் வட கொரிய – தென் கொரிய அதிபர்களின் சந்திப்பு அடுத்த வாரமும், மற்றும் வட கொரிய – அமெரிக்க அதிபரின் சந்திப்பு வரும் ஜூன் மாதமும் இடம்பெறவுள்ள நிலையில், வடகொரிய அதிபரின் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

வடகொரிய அதிபரின் இந்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரவேற்றுள்ளார்.

 

Latest articles

Similar articles