அமெரிக்காவைத் தாக்கும் திறன் கொண்ட வடகொரியாவின் ஏவுகணை

வட கொரியா அண்மையில் சோதித்துள்ள கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை, அமெரிக்காவின் நிலப்பரப்பைத் தாக்கும் திறன் கொண்டதாக ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஏவுகணையின் அளவு மற்றும் நிறையைப் பொறுத்து, இது 15,000 கிலோமீற்றர் வரை செல்லக் கூடியது என்றும், அமெரிக்கா இந்த சுற்றுவட்டத்திற்குள்ளேயே வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அணு குண்டினைக் காவிச் செல்லக் கூடிய திறன் உடையதாக கருதப்படும் இந்த ஏவுகணைச் சோதனையை அமெரிக்கா வன்மையாகக் கண்டித்துள்ளதுடன், இவ்வாறான செயற்பாடுகளை தொடர்ந்தும் பொறுத்துக் கொள்ள முடியாதெனவும் தெரிவித்துள்ளது.

Latest articles

Similar articles