இலங்கை மக்களுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கும் 🎥

இலங்கை மக்களுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இலங்கை மிகவும் நெருக்கடியான ஒரு நிலையை கடந்துகொண்டிருக்கிறது. இவ்வாறானதொரு நிலையில் இந்தியா முடிந்தளவு அனைத்து உதவிகளையும் வழங்கும் எனவும் மோடி அவர்கள் தெரிவித்தார்.

நேற்று(26/05) சென்னை நேரு விளையாட்டரங்கில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது பிரதமர் மோடி அவர்கள், தனது யாழ்ப்பாண விஜயத்தை நினைவு கூர்ந்ததுடன், யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த முதல் இந்திய பிரதமர் தான் எனவும் பெருமை கொண்டார்.

பிரதமர் மோடியின் உரை தமிழ் மொழிபெயர்ப்புடன்

மகிந்த ராஜபக்ச ஆட்சியில் சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் பெருமளவில் அதிகரித்திருந்ததுடன், இந்தியாவின் பாதுகாப்புத் தொடர்பாக இந்தியா கவலைகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles