மியான்மார் மீது ஐ.நா கடும் குற்றச்சாட்டு

மியான்மாரில் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் மீது நடந்த கண்மூடித்தனமான படுகொலைகள், குழந்தைகள் மீதான கடும் தாக்குதல்கள், கூட்டு பாலியல் வல்லுறவுக்குள்ளான பெண்கள், எரிக்கப்பட்ட கிராமங்கள் என்பன சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் பார்க்கும்போது மிகக்கடுமையான குற்றங்கள் என ஐக்கிய நாடுகள் சபை குற்றம் சாட்டியுள்ளது.

மேலும் இந்த கடுமையான குற்றங்களில் ஈடுபட்ட மியான்மார் இராணுவத்தை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை மியான்மார் வந்து விசாரணைகளை நடத்த அந்நாட்டு அரசு தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இனப்படுகொலை மேற்கொண்ட மியான்மார் நாடு

Latest articles

Similar articles