இனப்படுகொலை மேற்கொண்ட மியான்மார் நாடு

ரோஹிஞ்சா முஸ்லிம் மக்களை மிக மோசமாக நடத்திய மியான்மார் நாடு, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும் என்று ஐ.நா அறிக்கை கூறுகிறது.

கிட்டத்தட்ட ஏழு லட்சம் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் கடந்த ஆண்டு  மியான்மாரில் இருந்து வெளியேறிருப்பதாக கூறும் மனித உரிமை அமைப்புகள், பல ஆயிரக்கணக்கோனோர் இறந்துவிட்டதாக கூறுகின்றன.

இதனை வழிநடத்திய முக்கிய ஆறு உயர் ராணுவ அதிகாரிகள் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் எனவும் ஐ.நா கூறுகின்றது..

வன்முறைகளைத் தடுக்கத்தவறிய மியான்மார் தலைவர் ஆங் சான் சூச்சியை இந்த அறிக்கை கடுமையாக விமர்சித்துள்ள ஐ.நா அறிக்கை, “கண்மூடித்தனமாக செய்யப்பட்ட கொலைகளையோ, கூட்டு பாலியல் வன்கொடுமை, குழந்தைகள் மீதான தாக்குதல், கிராமங்களை எரித்தல் போன்ற ராணுவத்தின் வன்முறைகளை அவர்களால் நியாயப்படுத்த முடியாது” என்றும் குறிப்பிட்டுள்ளது.

Latest articles

Similar articles