ரஷ்யாவில் மாஸ்டர்காட் பரிவர்த்தனைகள் இடைநிறுத்தம்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பினால் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா உட்பட பல நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்தியுள்ளன. இதனையடுத்து ரஷ்யாவின் பல வங்கிகள் சுவிவ்ட் (SWIFT) சர்வதேச பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டது.

தற்போது, உலகம் முழுவதும் வங்கி அட்டைகளை (Debit and Credit cards) சேவையினை வழங்கிவரும் நிறுவனங்களின் ஒன்றான மாஸ்டர்காட் (Mastercard) நிறுவனமும் தனது பண பரிவர்த்தனைகளை ரஷ்யாவில் இடைநிறுத்தியுள்ளது. 

ஏற்கனவே ரஷ்ய ரூபிளின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ள நிலையில்,மாஸ்டர்காட் (Mastercard) நிறுவனத்தின் பரிவர்த்தனை இடைநிறுத்தமும் சாதாரண ரஷ்ய மக்களை மேலும் கஷ்டத்தினுள் தள்ளும் என்பதில் ஐயமில்லை.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles