அமைச்சர்களின் இராஜினாமா மட்டும் போதுமா?

இலங்கையில் நாடு தழுவியரீதியில் மக்கள் மேற்கொண்ட போராட்டங்களையடுத்து, அமைச்சரவையில் இருந்த அனைத்து அமைச்சர்களும் இராஜினாமா செய்துள்ளனர்.

இருப்பினும் பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்னும் பதவி விலகவில்லை. அவர் தொடர்ந்தும் பிரதமராக செயற்படுவார் என டினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

‘ராஜபக்ச’ குடும்பத்தினரால் இலங்கை பொருளாதாரரீதியில் மிகவும் மோசமான நிலைக்குச் சென்றுவிட்டது என பொதுமக்கள் நாடு தழுவியரீதியில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டிருந்தார்கள். இலங்கை மற்றும் உலக நாடுகளில் நடந்த போராட்டங்களில் மக்கள் விடுத்த வேண்டுகோள் “GoHomeGota”.

இந்நிலையில் அமைச்சரவை அமைச்சர்கள் மட்டும் பதவி விலகி, தொடர்ந்தும் மகிந்த பிரதமராக பதவி வகித்தால், அது சிங்கள மக்களை ஏமாற்றும் ஒரு கண்துடைப்பாகவே இருக்கும்.

மக்களால் தெரிவு செய்யப்பட்டு ஜனாதிபதியான கோத்தபாய ராஜபக்ச தொடர்ந்தும் ஜனாதிபதியாகவே செயற்படுவார். அவருடன் மகிந்தவும் பிரதமராக செயற்பட்டால், முந்திய ஆட்சிக்கும், அமையவிருக்கும் ஆட்சிக்கும் என்ன வித்தியாசம்?

பசில் ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோர் பதவி விலகவாவா சிங்கள மக்கள் போராட்டம் நடத்தினர்?? இலங்கை அரசியல் நடவடிக்கைகளை உற்று நோக்கும்போது, சிங்கள மக்களின் போராட்டம் தொடரும் போலவே தோன்றுகின்றது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles