நான்காவது தடவையாக பிரதமரான மகிந்த ராஜபக்ச

மகிந்த ராஜபக்ச இலங்கையின் பிரதமராக மீண்டும் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தனது சகோதரரும் ஜனாதிபதியுமான கோத்தபாய ராஜபக்ச முன்னிலையில் களனி ரஜ மஹா விகாரையில் பதவியேற்றார்.

mahinda rajapaksa premier
mahinda rajapaksa premier

மகிந்த ராஜபக்ச பிரதமராவது இது நான்காவது முறையாகும். பொதுஜன பெரமுனவில் போட்டியிட்டு 527,364 விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருந்தார். இதுவே இலங்கையில் வேட்பாளர் ஒருவர் பெறும் அதிக விருப்பு வாக்குகளாகும். இதற்கு முன்னர் 2015ல் இடம்பெற்ற தேர்தலில், ரணில் விக்கிரமசிங்க 500,566 விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles