மகிந்த உட்பட ஏழு பேரைக் கைது செய்யுமாறு வழக்குத் தாக்கல்

இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச உட்பட ஏழுபேரைக் கைது செய்யும்படி கொழும்பு நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் சேனக பெரேரா என்பவரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில், அகிம்சை வழியில் அலரி மாளிகையின் முன்னாலும், காலி முகத்திடலிலும் ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டமை மற்றும் உதவியமை போன்ற காரணங்களுக்காக, உடனடியாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மகிந்த ராஜபக்ச உட்பட பின்வரும் ஏழு பேரும் கைது செய்யப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

– ஜோன்ஸ்ரன் பெர்னாண்டோ (பா.உ)
– சஞ்சீவ எதிரிமான (பா.உ)
சனத் நிஷாந்த (பா.உ)
– சமன்லால் பெர்னாண்டோ (மொரட்டுவை)
– தேசபந்து தென்னக்கோன்(மேல்மாகாண DIG)
– சந்தன விக்ரமரட்ண (IGP)

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles