‘மைனா கோ கம’ அடித்து நொருக்கப்பட்டது 🎥

அலரி மாளிகையின் முன்னால் மகிந்தவின் ஆதரவு அணிக்கும், மகிந்த எதிர்ப்பு அணிக்குமிடையில் கைகலப்பு மூண்டுள்ளதால் அவ்விடத்தில் பதற்றம் தோன்றியுள்ளது.

மகிந்தவின் உரை முடிந்த பின்னர், அலரிமாளிகையிலிருந்து வெளியே வந்த பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களினால் (காடையர்களினால்) ‘மைனா கோ கம’ பகுதியில் உடமைகள் நாசாப்படுத்தப்பட்டு தீ மூட்டப்பட்டுள்ளது.

பொதுஜன பெரமுணவின் ஆதரவாளர்கள் என்னும் பெயரில் காடையர்களே அலரி மாளிகைப் பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திலுள்ள காவல்துறையினர் நடவடிக்கைகள் எதுவும் எடுக்காமல், நடைபெற்றுக்கொண்டிருக்கும் வன்முறைகளை வேடிக்கை பார்த்தவண்ணமுள்ளனர்.

வன்முறையில் ஈடுபடுவோர் மகிந்தவிற்கு சார்பான கோஷங்களை எழுப்பிய வண்னம் உள்ளனர்.

ஜனாதிபதி அவசரகால சட்டத்தை அமுல்படுத்தியிருந்தும், காவல்துறையினர் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் இருப்பது இலங்கையின் பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பில் பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

Latest articles

Similar articles