பிரதமர் பதவியை நிராகரித்த சஜித், கரு ஜெயசூரியா

கரு ஜெயசூரியா மற்றும் சஜித் பிரேமதாசாவை தான் பிரதமராக பதவியேற்கும்படி கேட்டதாகவும், அவர்கள் நிராகரித்த பின்பே மஹிந்த ராஜபக்சவை ​தான் ​பிரதமராக நியமி​த்ததாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, “என்னால் ரணிலுடன் தொடர்ந்து பணியாற்ற முடியாமல் போனபோது, நான் கரு ஜெயசூரியா மற்றும் சஜித் பிரேமதாசாவை​ ​பிரதமராக பதவியேற்கும்படி கேட்​டேன். ஆனால் அவர்கள் ரணிலுக்கு எதிராக தம்மால் பதவியேற்க முடியாது எனத் தெரிவித்தார்கள். அதன் பின்னர் நான் எல்லோருடனும் ஆலோசித்தபின்னர் ​மஹிந்த ராஜபக்சவை ​பிரதமராக நியமி​த்தேன்.

தான்தோன்றித்தனமாக நான் எதையும் செய்யவில்லை. அரசியலமைப்பிற்கு அமைவாகவே நான் பிரதமர் நியமனத்தை மேற்கொண்டேன். சமய மதகுருமார்கள், வெளிநாட்டு ராஜதந்திரிகள் என எல்லோரும் என்னை சந்தித்திருந்தார்கள். எல்லோருக்கும் விளக்கமளித்துள்ளேன். ஆகவே நான் எடுத்த முடிவிலிருந்து ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை.” என்று ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

நேற்று( ​05/11) நடைபெற்ற மக்கள் பேரணியில் பங்கு பற்றிய  மஹிந்த மற்றும் மைத்திரி​,​ நான்கு வருடங்களின் பின்னர் ஒரே மேடையில் ​​ஒன்றாக​ ​​அமர்ந்திருந்த​தைக்​ ​​காணக் கூடியதாக இருந்தது. ​

தொடர்புடைய செய்திகள்
உங்கள் கருத்து
Loading...