அமெரிக்க குடியுரிமையை விடுத்து இலங்கை குடிமகனாக வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப்போவதாக கோத்தபாய ராஜபக்ச சர்வதேச ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.

அத்துடன், தான் ஜனாதிபதியானால் இலங்கைப் புலனாய்வுப் பிரிவை மீள்கட்டியெழுப்பி, மக்களை வேவு பார்ப்பதன் மூலம் இஸ்லாமிய பயங்கரவாதத்தை முற்றாக இல்லாதொழிப்பேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, 2011ல் தான் உருவாக்கிய 5000 பேர் கொண்ட புலனாய்வு கட்டமைப்பை தற்போதுள்ள அரசாங்கம் கலைத்துவிட்டதாகவும், அதனால்தான் இப்போது இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
2009ம் ஆண்டு இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டில் கோத்தபாய ராஜபக்ச முதன்மையானவர் என்பது குறிப்பிடத்தக்கது.