கோத்தபாயவே புலனாய்வுப் பிரிவு அதிகாரளின் எண்ணிக்கையை உயர்த்தினார்

​​2009ம் ஆண்டு போர் முடிவுற்ற பின்னர், கோத்தபாய ராஜபக்சவே இலங்கை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளின் எண்ணிக்கையை 1200 இலிருந்து 7000 ஆக உயர்த்தினார் என சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடந்த கருத்தரங்கு ஒன்றிலேயே சம்பிக்க ரணவக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை பூராகவும் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளை பணியில் அமர்த்தி, தான் நினைத்தவற்றை சர்வாதிகாரப்போக்கில் செயற்படுத்திக்கொண்டிருந்தார்.

இதற்காக அவர் கொழும்பு புறக்கோட்டையிலுள்ள ரிபோலியை சித்திரவதை முகாமாக பயன்படுத்தினார் என சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

Latest articles

Similar articles