மீண்டும் முடங்கும் (f)பிரான்ஸ்

ஐரோப்பா கண்டத்தில் வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரசின் தாக்கத்தின் காரணமாக (f)பிரான்ஸ் மீண்டும் நாடளாவியரீதியில் முடக்க நிலைக்குச் செல்கிறது. வரும் வெள்ளிக்கிழமையிலிருந்து (30/10) நவம்பர் மாதம் இறுதிவரை இந்த முடக்க நிலை அமுலில் இருக்குமென (f)பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசின் இரண்டாம் அலை, முதலாவது ஏற்படுத்திய தாக்கத்தைவிட கடுமையாக இருக்குமென தெரிவித்துள்ள ஜனாதிபதி எம்மானுவல் மக்ரோன், மக்கள் தேவையற்ற விதத்தில் வீட்டைவிட்டு வெளியில் வர வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

உணவு விடுதிகள், மதுபான சாலைகள் என்பன மூடப்பட்டிருக்கும். இருப்பினும் பாடசாலைகள் மற்றும் தொழிற்சாலைகள் இயங்கும் எனவும் ஜனாதிபதி எம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் ஐந்தாவது இடத்தில் உள்ள (f)பிரான்ஸில் 35,785பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest articles

Similar articles