தெஹிவளை மிருகக்காட்சிசாலையை பிலியந்தலைக்கு மாற்ற உத்தேசம்

தெஹிவளை மிருகக்காட்சிசாலையை பிலியந்தலை பிரதேசத்திற்கு மாற்ற உத்தேசித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சுற்றுலாதுறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதுபற்றி தெரிவிக்கையில், தெஹிவளையில் அமைந்துள்ள இலங்கையின் பிரபல மிருகக்காட்சிசாலையை, பிலியந்தலை கஹபொல பகுதிக்கு மாற்ற உத்தேசித்துள்ளாதாகக் குறிப்பிட்டார். இது தொடர்பான பிரேரணையை நாடாளுமன்றில் சமர்பிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கூடுகளில் அடைத்து வைத்து மிருகங்களைப் பார்வையிடுவது காலாவதியான முறையாகும். நவீன உலக முறைகளிற்கேற்ப மிருகங்க்களை கொடுமைப்படுத்தாது பராமரிப்பது அவசியமாகுமெனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் மிருகங்களைப் பராமரிக்க மாதாந்தம் 40 மில்லியன் ரூபாய்கள்வரையில் செலவிடப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles