பத்தாயிரத்தைக் கடந்த கொரோனா மரணங்கள்

கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்ட நாளிலிருந்து இலங்கையில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தைக் கடந்துள்ளது. இறுதியாக வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ தகவல்களின்படி, இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10,140 ஆகும்.

மேற்படி தரவுகள் இலங்கை சுகாதாரத் துறையினரால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ தரவுகளே. இருப்பினும் உண்மையான உயிரிழப்புகளின் எண்ணிக்கை மிக அதிகம் என உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.

தற்போது நாட்டையே உலுக்கிக்கொண்டிருக்கும் மூன்றாவது அலையில் மரணமடைந்தவர்களே அதிகமாவர். டெல்டா வகை வைரஸ் இளவயதினரையும் கடுமையாகத் தாக்கி வருவதால், மரணிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிக்கும் என்றே அஞ்சப்படுகிறது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles