இலங்கையில் கொரோனா தொற்றின் காரணமாக ஏற்படும் மரணங்கள் தொடர்ந்தும் அதிகரித்த வண்ணம் உள்ளது. முதன்முதலாக 200 இற்கும் அதிகமான மக்கள் ஒரே நாளில் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
25ம் திகதிக்கான தரவின்படி, 108 பெண்கள் மற்றும் 101 ஆண்கள் உட்பட மொத்தமாக 209பேர் உயிரிழந்துள்ளார்கள். இதில் 163பேர் அறுபது வயதிற்கு மேற்பட்டவர்கள். 46பேர் முப்பது வயதிற்கும் 59 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் ஆவர்.

இதேவேளை புதிதாக 4,602பேர் கொரோனா தொற்றிற்கு உள்ளாகியுள்ளனர். அதி வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸினால், இலங்கையில் இதுவரை மொத்தமாக 412,370 தொற்றுக்குள்ளாகியிருப்பதுடன், 8,157பேர் உயிரிழந்துள்ளனர்.