கொட்டும் மழையிலும் இரண்டாவது நாளாக தொடரும் ஆர்ப்பாட்டம்

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை பதவி விலகக்கோரி கொழும்பு காலி முகத்திடலில் நேற்று காலை ஆரம்பமான மக்கள் ஆர்ப்பாட்டம், இன்றும் இரண்டாவது நாளாகத் தொடர்கிறது.

கொழும்பில் பெய்துவரும் கடும் மழையையும் பொருட்படுத்தாது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை நாட்டின் வளங்கள், திறைசேரி என சுரண்டக் கூடிய அனைத்தையும் சுரண்டி, ராஜபக்ச சகோதரர்கள் இலங்கையை பொருளாதாரரீதியில் சீரழித்து, மக்களின் வாழ்க்கைத் தரத்தை மிகவும் கீழ் நிலைக்குத் தள்ளியுள்ளனர் என ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றிய மக்கள் மிகவும் கோபத்துடன் தெரிவித்துள்ளனர்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles