கொழும்பு காலி முகத்திடலில் திரளும் மக்கள்

மூன்று நாட்கள் பாராளுமன்றம் கூடி அரசாங்கமும், எதிர்க்கட்சியினரும் வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட்டும், அரசியலில் எவ்வித மாற்றமோ, முன்னேற்றமோ ஏற்படவில்லை. மக்களுக்கும் எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை.

எனவே மக்களின் போராட்டங்கள் இந்த வாரமும் தொடரும் என்பது திண்ணம். இன்றும் நாடு முழுவதும் பல ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறவுள்ள நிலையில், கொழும்பு காலி முகத்திடலில் இளைஞர்களால் முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்டம் மிகப் பெரிய அளவில் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

மக்களின் ஆர்ப்பாட்டத்தை முறியடிக்க, காலி முகத்திடலில் பல மின் விளக்குகளை கடற்படையினர் அகற்றியிருந்ததுடன், சில பகுதிகளில் மக்களின் நடமாட்டத்திற்கும் தடை போட்டுள்ளனர்.

இருப்பினும் இன்று (09/04) இளைஞர், யுவதிகள் என பல நூற்றுக் கணக்கான மக்கள் காலி முகத்திடலில் குவியத் தொடங்கியுள்ளனர். அரசியல் கட்சிகளின் பங்களிப்பு இருக்குமா இல்லையா என்பது இன்னும் சில மணி நேரத்தில் தெரிய வரும்.

மக்களின் ஆர்ப்பாட்டங்களைக் குழப்ப, அரசாங்கம் சில சதித் திட்டங்களை மேற்கொண்டுள்ளதாக தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக அநுர குமார திசாநாயக்கா நேற்று தெரிவித்திருந்தார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Latest articles

Similar articles