ஆப்கானிஸ்தானை தமது முழுமையான கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ள இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான தலிபானுடன் இணைந்து செயற்பட சீனா, ரஷ்யா மற்றும் ஈரான் போன்ற முக்கிய நாடுகள் முன்வந்துள்ளன.
சீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் AFP செய்தி சேவைக்கு வழங்கியுள்ள பேட்டியில், ஆப்கானிஸ்தானுடன் ஆழமான உறவைப் பேணும் சந்தர்ப்பத்தை சீனா வரவேற்பதாகவும், தலிபான்கள் சீனாவுடனான உறவை வளர்ப்பதற்கான நம்பிக்கையினை மீண்டும், மீண்டும் வலியுறுத்தி வந்துள்ளார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவும் தலிபான்கள் உடனான உறவைப் பேண விரும்புவதாக தெரிவித்துள்ளது. மேலும் ரஷ்யாவின் ஆப்கானிஸ்தானிற்கான தூவர் தூதரகத்தின் பாதுகாப்புத் தொடர்பாக தலிபான்களுடன் செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.
அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் சமாதானத்தை ஏற்படுத்துவதில் தோல்வியைத் தழுவியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள ஈரான், அமெரிக்கப் படைகளின் வெளியேற்றம் ஆப்கானிஸ்தானில் சமாதானம் தோன்ற வழியேற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.