லெபனானில் பாரிய குண்டு வெடிப்பு, 78பேர் உயிரிழப்பு

லெபனானின் தலைநகரான பேரூட்டில் இடம்பெற்ற பாரிய குண்டு வெடிப்பில் இதுவரை 78பேர் உயிரிழந்துள்ளதுடன், 4000 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.

பல வெளிநாட்டவர்ளும் உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. வைத்தியசாலைகள் அனைத்தும் காயமடைந்தவர்களால் நிரம்பி வழிவதாகவும், சிகிச்சையளிப்பதில் பல நெருக்கடிகள் நிலவுவதாகவும் உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.

2,750 தொன்கள் அமோனியம் நைதிரேட் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த இரசாயன களஞ்சியம் ஒன்றிலேயே இந்த குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது. அனுகுண்டு வெடிப்பிற்கு ஒப்பான காளான் வடிவிலான புகை எழுந்துள்ளது.

இது தொடர்பாக லெபனான் ஜனாதிபதி தெரிவிக்கையில், 2,750 தொன்கள் அமோனியம் நைதிரேட் இரசாயனம் பாதுகாப்பற்ற முறையில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தமை தம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாததொன்று என தெரிவித்துள்ளார்.

குண்டு வெடிப்பின் சத்தம் சுமார் 240km தொலைவில் அமைந்துள்ள சைப்பிரஸ் தீவு வரைக்கும் கேட்டுள்ளது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles