புதினம்

கொரோனா வைரஸின் பரவல் அதிகரிப்பு. உயிரிழப்பு 300 ஆக உயர்வு

சீன தேசத்தை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸின் தாக்கத்தினால் இதுவரை 304பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் 14,300 மேற்பட்டோரும், உலகலாவியரீதியில் 210ற்கு மேற்பட்டோரும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.வைரஸ் தாக்கத்தின் வேகம் சற்று அதிகமா இருப்பதால், உயிரிழப்பு மற்றும் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இன்று (02/02) பிலிப்பைன்ஸ் நாட்டில் 44 வயதுடைய சீனப் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கத்தினால் சீனாவிற்கு...

இலங்கையில் அரசியல் பழிவாங்கல்கள் ஆரம்பம்

இலங்கையில் அரசியல் பழிவாங்கல்கள் ஆரம்பமாகியுள்ளதை நேற்றை தினம் (18/12) இடம்பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்கவின் கைது உறுதிப்படுத்தியுள்ளது. 2016ல் இடம்பெற்ற வீதி விபத்து சம்பந்தமாக ஒருவரை இரவில் சென்று கைது செய்ய வேண்டிய அவசியயம் இல்லை. அதுவும் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை கைது செய்யும்போது கடைபிடிக்கவேண்டிய எந்த ஒரு விதிமுறைகளும் பின்பற்றப்படாமல் இந்த கைது...

பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க கைது

இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க நேற்று (18/12) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.2016ல் இடம்பெற்ற வீதி விபத்து சம்பந்தமாகவே இவரது கைது இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. இருப்பினும் சபாநாயகருக்கோ, நீதிவானுக்கோ அறிவிக்காமலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சம்பிக்கவை சஜித் பிரேமதாச நேரில் சென்று சந்தித்துள்ளார். https://puthinam.news/sri-lanka-political-revenge/

TNP : ஸ்ரீகாந்தா தலைவர், சிவாஜிலிங்கம் செயலாளர்

செல்வம் அடைக்கலநாதன் தலைவராக உள்ள TELO கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஸ்ரீகாந்தா, 'தமிழ்த் தேசியக் கட்சி' (TNP) எனும் அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார். இந்த கட்சியின் தலைவரான ஸ்ரீகாந்தா, பொதுச் செயலாளராக சிவாஜிலிங்கத்தையும், உப தலைவராக சிவகுருநாதன் என்பவரையும் நியமித்துள்ளார். இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலை சிறுபான்மை மக்களுக்கு சாதகமற்றதொன்றாகவே காணப்படுகிறது. இவ்வாறானதொரு நிலையில் மேலும் மேலும் பல சிறிய...

தொடர் மழை, கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களில் வெள்ளம்

தொடர்ந்து பெய்துவரும் கடும் மழையினால் கிளிநொச்சி, மற்றும் மன்னார் மாவட்டங்கள் பெரும் பாதிப்பிற்கு உட்பட்டுள்ளன. இரணைமடு குளத்தின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதனால் வான்கதவுகள் படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன. இதனால் மக்களை அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை 6800 மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட...

இலங்கையில் தொடர் மழை, நால்வர் உயிரிழப்பு, 71,000 குடும்பங்கள் பாதிப்பு

இலங்கையில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் கடும் மழையால் இதுவரை 71,000 குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. தொடர் மழையின் காரணமாக இதுவரை நால்வர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளார்.  சீரற்ற காலநிலை தொடர்வதால், பாதிப்புகள் இன்னும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீதுவையில் ஐந்து தமிழ் இளைஞர்கள் கைது, நால்வர் விடுதலை

இலங்கையின் சீதுவை பிரதேசத்தில் வாடகை வீட்டிலிருந்த ஐந்து தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றி முன்னிலைப்படுத்தப்பட்டனர். இவர்களில் நால்வர் விடுவிக்கப்பட்டு, ஒருவரை மட்டும் காவல்துறை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு என்னவெனில், ஜனாதிபதி கோத்தபாயவை அல்லது அவரது குடும்ப உறுப்பினர் எவரையாவது கொலை செய்வதாம் !!!! அவ்வாறு கொலை செய்தால், பாதுகாப்பாக...

இலங்கைக்கான சுவிஸ் தூதரகத்தின் அறிக்கை

கடந்த 25ம் திகதி கொழும்பில் தமது தூதரக பணியாளர் ஒருவரை வீதியில் வைத்து பலவந்தமாக விசாரணை செய்து, கடத்த முற்பட்டமை தொடர்பாக இலங்கைக்கான சுவிஸ் தூதரகம் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. கடத்தல் முயற்சி சம்பந்தமாக ஊடகங்களில் பலவிதமான, உண்மைக்கு புறம்பான செய்திகள் வெளிவந்துகொண்டிருப்பதையடுத்து, சுவிஸ் தூதரகம் அறிக்கை ஒன்றை விடுத்து தெளிவுபடுத்தியுள்ளது. அந்த அறிக்கையில், 25/11/2019 தமது...

மாவீரர் நாள் – கார்த்திகை 27

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தம் இன்னுயிர்களைத் தியாகம் செய்த மாவீரர்களுக்கு எமது வீர வணக்கங்கள்.

டக்ளஸ் தேவானந்தா, ஆறுமுகம் தொண்டமான் அமைச்சர்களாக பதவியேற்பு

ஈபிடிபி அமைப்பின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் ஆகியோர் கோத்தபாய ராஜபக்சவின் இடைக்கால அரசில் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். கடற்தொழில்  மற்றும் நீரியல்வள அமைச்சராக டக்ளஸ் தேவானந்தாவும், தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராக ஆறுமுகம் தொண்டமானும் பதவியேற்றுள்ளனர்.ராஜாங்க அமைச்சர்களின் நியமணத்தின்போது மேலும் சில தமிழர்களுக்கு பதவிகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

About Me

Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

மாவையின் உடல் தீயுடன் சங்கமம்

தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...
- Advertisement -spot_img