புதினம்

69 இலட்சம் மக்களின் விருப்பம் இதுதான்

6,924,255 வாக்குகள் பெற்று மாபெரும் வெற்றிபெற்ற கோத்தபாய ராஜபக்ச தனது சகோதரர்களில் ஒருவரான மகிந்த ராஜபக்சவை நேற்று (21/11) பிரதமராக நியமித்தார்.இன்று (22/11) தனது இன்னொரு சகோதரரான சாமல் ராஜபக்சவை மிக முக்கிய அமைச்சராக நியமித்துள்ளதுடன், இன்னும் பல முக்கிய அமைச்சுக்களை மகிந்த ராஜபக்சவிற்கு ஒதுக்கியுள்ளார். 15 பேர் கொண்ட இடைக்கால அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் இன்று...

மகிந்த ராஜபக்ச பிரதமராகப் பதவியேற்றார்

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் சகோதரர் மகிந்த ராஜபக்ச இலங்கையின் பிரதமராக பதவியேற்றுள்ளார். இலங்கை வரலாற்றில் அண்ணன் பிரதமராகவும், தம்பி ஜனாதிபதியாகவும் பதவி வகிப்பது இதுவே முதல் தடவை. 'ராஜ்பக்ச' குடும்பத்தின் கையில் இலங்கை வீழ்ந்திருப்பதால், நன்மையடைப்போவது என்னவோ சீனாவும், அமெரிக்காவும்தான்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க ராஜினாமா

இலங்கையின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்று முன் தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிடம் கையளித்துள்ளார். கடந்த சனிக்கிழமை (16/11) நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச அமோக வெற்றி பெற்றிருந்தார். இதனால் மக்களின் தீர்ப்பை ஏற்று அரச செயற்பாட்டினை சுமூகமாக கொண்டு செல்லுமுகமாக, ரணில் விக்ரமசிங்க தனது பிரதமர் பதவியினை ராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில்...

கோத்தபாய, சஜித் மற்றும் அனுர பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை

இந்த தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச, பதின்மூன்று லட்சத்திற்கும் அதிகமான (1,360,016) வாக்குகள் வித்தியாசத்தில் சஜித் பிரேமதாசாவை தோற்கடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களின் தீர்ப்பே…

இலங்கையில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில், கோத்தபாய ராஜபக்சவை சிங்கள மக்கள் ஒன்றுபட்ட மனதுடன் செயற்பட்டு அமோக வெற்றி பெறச் செய்துள்ளனர். பெரும்பான்மையின மக்களின் பெரும் ஆதரவு / ஆணை கோத்தபாய ராஜபக்சவிற்கு கிடைக்கப்பெற்றுள்ளது. திட்டமிட்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதல்கள், இலங்கையின் சரிவை நோக்கிய பொருளாதாரம் என்பன மக்களை கோத்தபாய ராஜபக்சவிற்கு ஆதரவாக வாக்களிக்கத் தூண்டியுள்ளது. காலி, ஹம்பாந்தோட்டை, மாத்தறை...

ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச வெற்றி

இலங்கையில் நேற்று (16/11/19) இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில், இலங்கை பொதுஜன பெரமுன அணியில் போட்டியிட்ட கோத்தபாய ராஜபக்ச 69 இலட்சங்களுக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார். 2009இல் இடம்பெற்ற இறுதிப்போரில் இனப்படுகொலையுடன் தொடர்புடையவர் என மனித உரிமை அமைப்புகளால் குற்றம் சாட்டப்பட்ட கோத்தபாய ராஜபக்சவிற்கு பெரும்பாண்மை சிங்கள மக்கள் தமது பூரண ஆதரவை வழங்கியுள்ளனர். இவர் நாளை (18/11)...

தேர்தலில் EPDP, பொதுஜன பெரமுன மற்றும் அங்கஜன் அணியைப் புறக்கணித்த மக்கள்

நேற்று (16/11) இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட கோத்தபாய ராஜபக்ச வட இலங்கையில் பெரிதாக வாக்குகளைப் பெற முடியவில்லை. இவருக்கு ஆதரவாக EPDP, பொதுஜன பெரமுனவின் யாழ் அணி மற்றும் அங்கஜன் அணியினர் கடுமையான தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்தனர். யாழ் பாராளுமன்ற உறுப்பினர்களான EPDP தலைவர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இலங்கை சுதந்திரக் கட்சியின் அங்கஜன் ஆகியோர் நேரடியாக களத்தில் இறங்கி பரவலான...

கோத்தபாயாவிற்கு வாழ்த்து தெரிவித்த சஜித் பிரேமதாச

இலங்கையில் நேற்று (16/11/2019) நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தனது தோல்வியை சஜித் பிரேமதாச ஏற்றுக்கொண்டுள்ளார். வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளதுடன், கோத்தபாய ராஜபக்ஸவிற்கு வாழ்த்தினையும் தெரிவித்துள்ளார். https://twitter.com/sajithpremadasa/status/1195947579269373952

இலங்கை ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் – யாழ்ப்பாணம் மாவட்டம்

நேற்று (16/11/2019) நடைபெற்று முடிந்த இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கிறன்றன. யாழ் மாவட்டத்தில் சஜித் பிரேமதாச அபார வெற்றி பெற்றுள்ளபோதிலும், இதுவரையில் கோத்தபாய ராஜபக்சவே முன்னிலை வகிக்கின்றார். யாழ்ப்பாண மாவட்டத்திற்கான முடிவுகள் பின்வருமாறு,

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையில் அக்கறை காட்டாத ஜனாதிபதி, மரண தண்டனை கைதியை விடுவித்தார்

எவ்வித குற்றமும் செய்யாமல், பல ஆண்டுகளாக சிறையில் வாடும் பல தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையில் அக்கறை காட்டாத இலங்கை ஜனாதிபதி,  மரண தண்டனை பெற்ற ஒரு கைதி ஒருவருக்கு விடுதலை வழங்கி தனது குரூர மனப்பான்மையை வெளிப்படுத்தியுள்ளார். 2005ல் சுவீடன் நாட்டு பெண் ஒருவரை கொலை செய்த குற்றத்திற்காக, 2012ல் மரண தண்டனை பெற்ற சிங்கள கைதி...

About Me

Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

மாவையின் உடல் தீயுடன் சங்கமம்

தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...
- Advertisement -spot_img