தொடர் மழை, கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களில் வெள்ளம்

தொடர்ந்து பெய்துவரும் கடும் மழையினால் கிளிநொச்சி, மற்றும் மன்னார் மாவட்டங்கள் பெரும் பாதிப்பிற்கு உட்பட்டுள்ளன.

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதனால் வான்கதவுகள் படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன. இதனால் மக்களை அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை 6800 மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்படைந்துள்ளனர் என ஆரம்ப கட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, மன்னார் மாவட்டத்திலும் தொடர்ந்து மழை பெய்துவருவதால் பல கிராமங்கள் வெள்ள நீரில் மூழ்கும் அபாயம் இருப்பதாக அரசாங்க அதிபர்  தெரிவித்துள்ளார். இதுவரை 470 குடும்பங்களைச் சேர்ந்த 1743பேர் பாதிப்படைந்துள்ளதாகவும் அரச அதிபர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தொடர்ந்து பெய்துவரும் மழையினால், இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிப்படைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest articles

Similar articles