புதினம்
National news
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் திகதி அறிவிப்பு
புதினம் -
கடந்த மார்ச் மாதம் கலைக்கப்பட்ட இலங்கை நாடாளுமன்றத்திற்கான தேர்தல், வரும் ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி நடைபெறுமென இலங்கை தேர்தல் ஆணைக்குழு அதிவிசேட வர்தமானி மூலம் அறிவித்துள்ளது.
Local news
11ம் திகதி முதல் வழமைக்குத் திரும்பும் யாழ் மாவட்டம்
புதினம் -
நாளை மறுதினம் 11ம் திகதி முதல் யாழ் மாவட்டம் வழமைக்குத் திரும்புமென யாழ் அரச அதிபர் அறிவித்துள்ளார். கொரோனா தொற்று இன்னும் முழுமையாக நீங்காத நிலையில், ஏறக்குறைய இரண்டு மாதங்களின் பின்னர் மீண்டும் வழமைக்குத் திரும்பவுள்ள யாழ் மாவட்டத்தில் அனைத்து செயற்பாடுகளும் வழமைபோல் இடம்பெறும் என அரச அதிபர் தெரிவித்துள்ளார். சுகாதார துறையினரின் அறிவுறுத்தல்களை பின்பற்றி, உணவகங்கள்,...
Local news
பாராளுமன்ற தேர்தல் பிற்போடப்பட்டது
புதினம் -
இலங்கையில் வரும் சனிக்கிழமை (25/04) நடைபெறவிருந்த பாராளுமன்ற தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அதிவிஷேட வர்த்தமானியின்படி பாராளுமன்ற தேர்தல் ஜூன் மாதம் 20ம் திகதி நடைபெறுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
Local news
இலங்கையில் தளர்த்தப்படும் ஊரடங்குச் சட்டம்
புதினம் -
கொரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமுல்படுத்தப்பட்டிருந்த காவல்துறை ஊரடங்குச் சட்டம் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தளர்த்தப்படுகிறது. நாளை (20/04) திங்கள் காலை 5 மணி முதல் இரவு 8 மணிவரை - கொழும்பு, - கம்பஹா, - களுத்துறை, - புத்தளம், - கண்டி, - கேகாலை, - அம்பாறை மாவட்டங்கள் தவிர ஏனைய மாவட்டங்களில்...
Local news
மீனவர்களைக் கடித்துக் குதறிய இலங்கை கடற்படை
புதினம் -
பூநகரி பிரதேசத்தில் கடற்தொழிலுக்கு சென்ற மீனவர்களை இலங்கை கடற்படை கடித்து குதறிய சம்பவம் கடந்த 7ம் திகதி இடம்பெற்றுள்ளது. நிறை வெறியில் நின்ற கடற்படையினர், ஊரடங்கு சட்டத்தை காரணம் காட்டி மீனவர்களை கடுமையாக தாக்கியுள்ளனர். நீரில் முகத்தை அமிழ்த்தியும், பொல்லுகளால் அடித்தும் தாக்கியது மட்டுமன்றி, கடித்தும் துன்புறுத்தியுள்ளனர். மீனவர்கள் ஊரடங்கு நேரத்தில் தொழிலுக்கு செல்லும் அனுமதி பத்திரத்தைக்...
World News
இங்கிலாந்து மகாராணி விசேட உரை, பிரதமர் மருத்துவமனையில் அனுமதி
புதினம் -
இங்கிலாந்து மகாராணி எலிசெபெத் II (93) அவர்கள் நேற்றையதினம் ஆற்றிய விசேட உரையில் "கொரோனா வைரசிற்கெதிரான போராட்டத்தில் நாம் வெற்றிகொண்டு மீண்டு வருவோம்" என நம்பிக்கை வெளியிட்டுள்ளார். மருத்துவத் துறையினர், மற்றும் சுகாதாரபிரிவினார் உட்பட எல்லோருக்கும் நன்றி தெரிவித்த மகாராணி, அரசின் வேண்டுகோளினையேற்று வீடுகளில் தங்கியிருந்து ஒத்துழைப்பு வழங்கிவரும் மக்களிற்கும் நன்றி தெரிவித்தார். மேலும் அவர் தனது...
National news
உதயங்க வீரதுங்க பிணையில் விடுதலை
புதினம் -
இலங்கைக்கான முன்னாள் ரஷ்ய தூதுவர் உதயங்க வீரதுங்க 25 லட்சம் ரூபாய் ரொக்கப் பிணையிலும், இரண்டு 500 லட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மிக் போர் விமான கொள்வனவில், 14 மில்லியன் அமெரிக்க டாலர்களை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்த உதயங்க வீரதுங்கவிற்கெதிராக சிவப்பு அறிவித்தல் விடுவிக்கப்பட்டு, சர்வதேச காவல்துறையின் உதவியும்...
Local news
இலங்கையில் ஐந்தாவது நபர் உயிரிழப்பு
புதினம் -
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இலங்கையில் ஐந்தாவது நபர் உயிரிழந்துள்ளார் என இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அண்மையில் இத்தாலியில் இருந்து நாடு திரும்பிய 44 வயதுடைய நபரே உயிரிழந்தவராவார். இவர் வெலிகந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
National news
இலங்கையில் மூன்றாவது மரணம்
புதினம் -
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மூன்றாவது நபர் உயிரிழந்துள்ளார். கொழும்பு அங்கொட வைத்தியசாலையில் கொரோனா சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மருதானையைச் சேர்ந்த நபரே உயிர்ழந்தவராவார். யாழில் மேலும் மூவருக்கு கொரோனா உறுதியானது இதேவேளை யாழ்ப்பாணம் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களில் பத்து பேரிற்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், முவருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சுவிஸ் நாட்டிலிருந்து வந்த...
National news
களுபோவில வைத்தியசாலை விடுதி மூடப்பட்டது
புதினம் -
கொழும்பு தெற்கு வைத்தியசாலையான களுபோவில வைத்தியசாலையின் விடுதி ஒன்று கொரோனா நோயாளி ஒருவர் இனம்காணப்பட்டதால் மூடப்பட்டுள்ளது. 60 வயது மதிக்கத்தக்க மொரட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே கொரோனா நோய்த் தொற்றுக்குள்ளாகியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த விடுதியிலிருந்த ஏனைய நோயாளிகள் ஹோமாகம ஆதார வைத்தியசாலையிலும், ஊழியர்கள் மகரகமையில் அமைந்துள்ள ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியிலும்...
About Me
Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
Latest News
மாவையின் உடல் தீயுடன் சங்கமம்
தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...
