புதினம்
Local news
இலங்கையில் ஊரடங்கு சட்ட மீறல்கள் அதிகரிப்பு
புதினம் -
கொரோனா வைரசின் தாக்கத்தை கட்டுப்படுத்த இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள காவல்துறை ஊரடங்கு சட்டத்தை பொதுமக்கள் மீறிச் செயற்படும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. இதுவரையில் (30/03/2020) 7100பேர் வரையில் ஊரடங்குச் சட்டத்தை மீறியமைக்காக கைது செய்யப்பட்டிருப்பதுடன், 1700இற்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை பேச்சாளர் ஜாலிய சேனரத்ன தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் கொழும்பு, யாழ்ப்பாணம், களுத்துறை, புத்தளம்...
Local news
இலங்கையில் இரண்டாவது மரணம்
புதினம் -
இலங்கையில் கொரோனா வைரசின் தாக்கத்தினால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். நீர்கொழும்பு கொச்சிக்கடை பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய நபரே உயிரிழந்தவராவார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர், கொரோனா சந்தேகத்தின் அடிப்படையில் அரச மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்தார். அங்கு குறித்த நபருக்கு நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நுரையீரல் பாதிப்பு மற்றும் மாரடைப்பினால் பாதிக்கப்பட்டிருந்த நபர் பின்னர்...
World News
கொரோனாவிலிருந்து மீண்ட 101 வயது முதியவர்
புதினம் -
கொரோனாவின் தாக்கதினால் பெரும் உயிர்ச்சேதங்களைச் சந்தித்துவரும் இத்தாலியில் ஒரு சிறு ஆறுதலான நிகழ்வும் இடம்பெற்றுள்ளது. இத்தாலியின் கிழக்கு நகரான் ரிமினியில் 101 வயதான முதியவர் ஒருவர் கொரோனாவின் பிடியிலிருந்து மீண்டு வந்துள்ளார். கொரோனா தொற்றினால் கடந்த வாரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர், நேற்று முன் தினம் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இது தொடர்பாய ரிமினி...
World News
2.2 டிரில்லியன் டாலர்கள் ஒதுக்கீடு செய்துள்ள அமெரிக்கா
புதினம் -
அதள பாதாளத்தில் விழுந்துள்ள பொருளாதாரத்தை சீர்செய்ய, 2.2 டிரில்லியன் டாலர்களை ($2.2tn) அமெரிக்கா ஒதுக்கீடு செய்துள்ளது. இது அமெரிக்க வரலாற்றிலேயே இதுவரை ஒதுக்கிய நிதிகளில் மிக அதிகமான தொகையாகும். அமெரிக்காவில் இதுவரையில் ஒரு லட்சம் பேருக்கு மேல் கொர்ரோனா நோய்த்தொற்றுக்குள்ளாகியிருப்பதுடன், 1600 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. 3.3 மில்லியனுக்கும்...
Global NEWS
கொரோனா நோய்த்தொற்றுக்குள்ளான போரிஸ் ஜோன்சன்
புதினம் -
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் கொரோனா நோய்த்தொற்றுக்குள்ளாகியுள்ளார். கொரோனாவின் அறிகுறிகளான காய்ச்சல், இருமல் என்பதை சாதுவாக உணர்ந்த போரிஸ் ஜோன்சன் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டபோது நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தான் வீட்டிலிருந்து கடமைகளை முன்னெடுப்பேன் என தெரிவித்துள்ள பிரதமர், வீடியோ பதிவொன்றையும் வெளியிட்டுள்ளார். Please join me for an important update on #coronavirus...
Local news
கொலையாளியான இராணுவ சிப்பாய் விடுதலை
புதினம் -
கொரோனா ஒரு பக்கம் கோரத்தாண்டவம் ஆடும் இவ்வேளையில், இலங்கை ஜனாதிபதி கோத்தாவும் தனது ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார். 2000ம் ஆண்டு யாழ் மிருசுவில் பகுதியில் ஐந்து வயது சிறுவன் உட்பட எட்டுப்பேரை சுட்டு படுகொலை செய்து, 2015இல் மரணதண்டனை பெற்ற இலங்கை இராணுவ சிப்பாய் ஒருவரை, இலங்கை ஜனாதிபதி கோத்தாபாய தனது...
Articles
தமிழரசுக் கட்சியின் வினோதமான வேட்பாளர் தெரிவு
புதினம் -
வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழர் தாயகத்தில் போட்டியிடும் இலங்கை தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் தெரிவில் இடம்பெற்றுள்ள தமிழர்களுக்கு பரீட்சையமே இல்லாத, தமிழரின் அரசியல் கொள்கைகளுக்கு மாறான கருத்துக்களைக் கொண்ட புது முகங்களைப் பார்க்கும்போது, வேட்பாளர் தெரிவு முறையாக இடம்பெறவில்லை எனபது மிகத்தெளிவாகத் தெரிகிறது. தேர்தலில் வெற்றி பெற வாக்குகள் மட்டுமே தேவை. அதனால்தான் வாக்குகள் பெறக்கூடிய...
Articles
ஐ.தே.க தனித்து போட்டி
புதினம் -
ஏப்ரல் மாதம் நடக்க இருக்கும் பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. இதற்கான முடிவை ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தேர்தல் ஆணைக்குவிற்கு அறிவித்துள்ளார். கடந்தவருடம் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கான ஆதரவினை இழுத்தடித்து, முழுமனமின்றி இறுதி நேரத்தில் வழங்கியிருந்த ரணில் விக்ரமசிங்க, இம்முறை தனித்துப்...
Local news
இலங்கை வரும் இத்தாலி, ஈரான், தென் கொரியா பயணிகளுக்கான அறிவித்தல்
புதினம் -
இலங்கை வரும் இத்தாலி, ஈரான் மற்றும் தென் கொரியா நாட்டு பயணிகளை பதினாங்கு நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக இலங்கை சுகாதார அமைச்சு தெரித்துள்ளது சீனாவில் கடுமையாகப் பரவி வந்த கொரோனா வைரஸ், தற்போது ஐரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவி வருகிறது. இதேவேளை மத்திய கிழக்கு நாடுகளிலும் வேகமாகப் பரவி வரும் கொரோனாவினால் ஈரான்...
Local news
இலங்கை பாராளுமன்றம் கலைப்பட்டது. ஏப்ரல் 25 தேர்தல்
புதினம் -
இலங்கை பாராளுமன்றம் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவினால் நள்ளிரவு கலைக்கப்பட்டது. இதற்கான அதிவிஷேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் வரும் ஏப்ரல் 25 பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுத்தேர்தல் நடைபெறும் எனவும், அதற்கான வேட்புமனுக்கள் வரும் மார்ச் மாதம் 12ம் திகதி தொடக்கம் 19ம் திகதி நண்பகல் 12 மணிவரை ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் அதிவிஷேட வர்த்தமானியில்...
About Me
Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
Latest News
மாவையின் உடல் தீயுடன் சங்கமம்
தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...
