இங்கிலாந்து மகாராணி விசேட உரை, பிரதமர் மருத்துவமனையில் அனுமதி

இங்கிலாந்து மகாராணி எலிசெபெத் II (93) அவர்கள் நேற்றையதினம் ஆற்றிய விசேட உரையில் “கொரோனா வைரசிற்கெதிரான போராட்டத்தில் நாம் வெற்றிகொண்டு மீண்டு வருவோம்” என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மருத்துவத் துறையினர், மற்றும் சுகாதாரபிரிவினார் உட்பட எல்லோருக்கும் நன்றி தெரிவித்த மகாராணி, அரசின் வேண்டுகோளினையேற்று வீடுகளில் தங்கியிருந்து ஒத்துழைப்பு வழங்கிவரும் மக்களிற்கும் நன்றி தெரிவித்தார்.

மேலும் அவர் தனது உரையில், இதற்கு முன்னர் தாம் சந்தித்த சவால்களிலிருது இது வித்தியாசமானது. இடர்களை எதிகொண்டுவரும் ஏனைய நாடுகளுடன் சேர்ந்து, நவீன விஞ்ஞான முறைகளினூடாக நாம் இதை வெற்றிகொள்வோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

போரிஸ் ஜோன்சன் மருத்துவமனையில் அனுமதி

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றிற்குள்ளான இங்கிலாந்தின் பிரதமர் பத்து நாட்களின் பின்னரும் வைரஸ் தாக்கம் குறைவடையாததால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Latest articles

Similar articles